
மரணத்தை வெல்லும் வழி
பொன்னார்ந்த திருவடியைப் போற்றி எங்குப்
புகலுவேன் யான் அறிந்த உண்மை எல்லாம்;
முன்னோர்கள் எவ் உய்ரும் கடவுள் என்றார்,
முடிவாக அவ்வுரையே நான் மேற்கொண்டேன்;
அன்னோர்கள் உரைததன்றி செய்கையில்லை
அத்வைத நிலை கண்டால் மரணம்முண்டோ?
முன்னோர்கள் உரைத்தபல சித்தர் எல்லாம்
முடிந்திட்டார், மடிந்திட்டார், மண்ணாய் விட்டார்.
.................................................
.................................................
பார்மீது நான்சாகா திருப்பேன், காண்பீர் !
மலிவு கண்டீர் இவ்வுண்மை, பொய் கூறேன் யான்,
மடிந்தாலும் பொய் கூறேன் மானிடற்கே,
நலிவுமில்லை, சாவுமில்லை, கேளிர், கேளிர் .
நாணத்தைக் கவலையினை சினத்தைப் பொய்யை
அச்சத்தை வேட்கைதனை அழித்து விட்டால்
அப்போது சாவும் அங்கே அழிந்து போகும்:
மிச்சத்தை பின்சொல்வேன், சினத்தை முன்னே
வென்றிடுவீர், மேதினியில் மரண மில்லை;
- பாரதி
No comments:
Post a Comment